பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

 

 

பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

 

சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவிய நிலையில், வேகமாக பரவிய காட்டுத்தீ தற்போது சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தீ லக்லான் கிராமத்தை நெருங்கியதால், அங்கு வசித்து வந்த 525 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

தீயை கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும், 6 தீயணைப்பு விமானங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Read Previous

ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

Read Next

எவரெஸ்ட் மாரத்தான் சாதனை வீராங்கனைக்கு ‘கல்பனா சாவ்லா விருது’! முதல்வர் விஜய் கவுரவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular