என்ரிகா நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்திற்குள் நீக்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒரே நாளில் நீக்கும் அளவுக்கு என்ன நடந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் “பயமா? பதற்றமா? டீலிங்கா?” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
வீரன் உள்ளிட்ட 11 வகையான மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மதுபானங்களின் விற்பனைக்கு நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மீண்டும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




