தூத்துக்குடியில் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கார் ஓட்டுநர் முத்துக்குமார் (40) என்பவரை அவரது நண்பர்களான சரவணன் (40), ஜெயப்பிரகாஷ் (33) ஆகியோர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு முற்றிய நிலையில், முத்துக்குமாரின் வாய் மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருவரும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தப்பியோடிய சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷை தென்பாகம் போலீசார் தேடி வந்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.




