கோவையில் மூதாட்டி கொலை வழக்கு: 17 வயது சிறுவன் கைது!

 

 

கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பின்னர் மூதாட்டியின் செல்போனை எடுத்துக்கொண்டு சிறுவன் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” – திமுக அயலக அணி கடும் விமர்சனம்!

Read Next

பள்ளி மாணவர் படுகொலை: “போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” – சிபிஎம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular