நீலகிரியில் சோகம்: பெண் தற்கொலை; தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபர் விஷம் குடித்தார்!

 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40), குடும்ப பிரச்சினை மற்றும் தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

கணவர் சிவகுமாரை அவசரமாக வீட்டிற்கு வருமாறு செல்போனில் அழைத்த சுஜாதா, பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, சுஜாதாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அச்சுதானந்தன், அவரது மரணத்தால் மனவேதனை அடைந்து விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தூத்துக்குடியில் மரக்கடை தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது!

Read Next

“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular