மும்பை அருகே நாலாசோபராவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட கேக்கில் இறந்த பல்லி கிடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கேக்கை சாப்பிட்ட 11 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




