“கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள்!” – அமுதன் கொலை குறித்து அதிமுக MLA!

 

 

விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்எல்ஏ காமராஜ் சட்டப்பேரவையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

கல்லூரி நிர்வாகம் தனது பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக உண்மையை மறைத்து பொய் கூறுவதாகவும், போலீசாரும் உண்மைகளை மறைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

மேலும், அமுதன் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைகளை மறைக்காமல் முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை அரசு தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் காமராஜ் வலியுறுத்தினார்.

Read Previous

அமுதன் கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் போதைப்பொருள் குறித்து கடும் விவாதம்!

Read Next

கழிவுநீர் பிரச்சினை: முதல்வர் விஜய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular