மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், இந்தியாவில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முதல்முறையாக உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள 21 எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மொத்தம் 63,810 டன் எல்பிஜியை உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 31,470 டன் இலக்கும், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 18,000 டன் இலக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் நிலவும் எல்பிஜி தட்டுப்பாட்டை குறைத்து, சமையல் எரிவாயு விநியோகத்தை சீராக வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.




