சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்துடன் தொடர்பில்லாத விஷயங்கள் குறித்து அமைச்சர் பேசியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டிய கருத்துகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என தெரிவித்தார். மேலும், உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
“அமைச்சர் யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார் என தெரியவில்லை” என சபாநாயகர் குறிப்பிட்டதால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




