தமிழக முதல்வரை விமர்சித்து கர்நாடக முதல்வர் “உங்கள் வேலையைப் பாருங்கள்” எனக் கூறியதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் கன்னடர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், கர்நாடக அரசு அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடுவதாகக் கூறி, விவகாரத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே அரசியல் ரீதியான கருத்து மோதல் நீடித்து வருகிறது.




