15 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு! சென்னை MRTS-க்கு புதிய மாற்றம்!

 

 

சுமார் 15 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை பறக்கும் ரயில் சேவை (MRTS) தொடர்பான முக்கிய நடவடிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. MRTS சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

 

இதன்படி, தெற்கு ரயில்வே தனது சொத்துகள் மற்றும் பராமரிப்பு தொடர்பான உரிமைகளை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது. இதன் மூலம் MRTS மற்றும் மெட்ரோ சேவைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னையில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு வசதியை அதிகரிக்கும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

“உங்கள் வேலையைப் பாருங்கள்” விமர்சனம்: கர்நாடக முதல்வருக்கு சிபிஎம் கண்டனம்!

Read Next

ரயிலில் தகராறு.. RPF வீரரை பிளேடால் தாக்கிய நடிகை கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular