நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி வரும் ‘இருளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக அருண் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘இருளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.




