தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, திமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அனைத்து ஆதாரங்களும் முதலமைச்சரிடம் உள்ளது” என தெரிவித்தார்.
இதையடுத்து எழுந்த முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் கூறியதுபோல் தன்னிடம் அனைத்து விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களும் இருப்பதாகவும், அவற்றை எப்போது வெளியிட வேண்டுமோ அப்போது வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்தப் பதில் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




