தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கர்நாடகாவில் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் மீனவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக.19) கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல், திமுக தரப்பிலும் இந்த விவகாரங்கள் குறித்து கவன ஈர்ப்பு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.20) சட்டப்பேரவையில் மீண்டும் இதுகுறித்து இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அப்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் அவருடன் இணைந்து சபாநாயகரிடம் வாதிட்டார்.
இதையடுத்து, கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் மீனவர்கள் கொலை தொடர்பாக தற்போது சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.




