மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ரூ.1,000 உதவித்தொகையை தகுதியின்றி பெறும் பயனாளிகளை கண்டறிந்து நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி, மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விதிகளை மீறி உதவித்தொகை பெறுகிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விதிகளுக்கு புறம்பாக உதவித்தொகை பெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தகுதியான பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.




