தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களுடன் தங்கியிருந்த ஹையத்துன் நிஷா என்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உடல் பாகங்களை பிரியாணி சமைக்கும் பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உயிரிழந்த பெண்ணின் தலை கிடைக்காத நிலையில், கைது செய்யப்பட்ட தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




