“லிவ்-இன் உறவு திருமணத்திற்கு நிகரானது” – டெல்லி உயர் நீதிமன்றம்!

 

 

மனமுதிர்ச்சி அடைந்த இருவர் இணைந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு திருமண உறவுக்கு நிகரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

காதல் ஜோடியின் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சௌரப் பானர்ஜி, வயது வந்த இருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமையில் பெற்றோர் அல்லது உறவினர்கள் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டார்.

 

மேலும், இருவரும் தங்களது விருப்பப்படி இணைந்து வாழும் முடிவை எடுத்திருந்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறர் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இந்தத் தீர்ப்பு வயது வந்தவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத் தேர்வுக்கான உரிமையை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

Read Previous

“பெண் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி!

Read Next

கோயில் மலைப்பாதையில் திடீர் மாரடைப்பு: பக்தர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular