ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது தந்தை நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் – தவெக எம்.எல்.ஏ. பாபு!

“சொல்வதை மட்டுமே செய்யும் ஒரே தலைவர் விஜய்” – தவெக எம்.எல்.ஏ. பாபு..

 

தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.

 

“சொல்வதை மட்டுமே செய்யும் ஒரே தலைவர் முதலமைச்சர் ஜோசப் விஜய்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும், தனக்காக பிரசாரம் செய்ய விஜய் 5 நிமிடங்கள் மட்டுமே வந்ததாகவும், அப்போது கொளத்தூர் முழுவதும் ஜொலித்ததாகவும் கூறிய அவர், தனது வெற்றி அப்போதே உறுதியானதாக தெரிவித்தார்.

 

“ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது தந்தை நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன். இனி தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு இடமில்லை; தவெக மட்டும்தான்” என்றும் பாபு பேசியுள்ளார்.

Read Previous

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பில் இருந்து இஸ்ரோ விலகுகிறதா?

Read Next

“திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்” – அமைச்சர் ரமேஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular