சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தேவையின்றி கூச்சலிட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு புதிய அறிவிப்புகள் குறித்து திமுகவினர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சரை நோக்கி கேள்விகள் எழுப்பப்படும் போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் எழுந்து அதற்கு உரிய விளக்கம் அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
அவையில் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளிப்பது இயல்பான நடைமுறையே என்றும் அவர் தெரிவித்தார்.




