சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி யாஷினி (16), வீட்டில் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த நல்ல பாம்பு அவரது கையில் கடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட மாணவி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் எர்ணாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




