வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இதன் தாக்கத்தால் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




