தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த சனா உல்லா (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். செவிலியர் பணியாற்றிய மருத்துவமனைக்கு அருகே சனா உல்லா பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் செவிலியர் தனியாக இருந்தபோது, சனா உல்லா அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




