காலநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை சார்பில் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் வெங்கட்ராமன் சட்டப்பேரவையில் இன்று (செப். 1) தெரிவித்தார். வரும் செப். 3-ம் தேதி முதல் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இந்த நடவடிக்கை நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




