தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே வடநாட்டு நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித், கமல் மற்றும் சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்துள்ளார். சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருடன் நட்பாக பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களை கவனத்தில் செலுத்தி வரும் நடிகை ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தற்போது அம்பானி வீடு திருமணத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் காட்சி அழித்தது மிகவும் அருமையாக இருந்தது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார் .அது மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் நடிகர் அக்ஷய்குமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்துக்கள் அக்ஷய்குமார் நான் ஒரு ரசிகையாக என் படுக்கை அறையில் உங்களுடைய போஸ்டரை வைத்திருந்தேன் என்று உங்களுக்கு ஸ்பெஷலான 150 ஆவது படத்தை நான் தயாரித்து உள்ளேன். இது மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் எனக்கு என்று தெரிவித்துள்ளார்.