மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “இந்த பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதி, வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.