இந்திய பங்கு சந்தையின் குறியீடானது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்றும் குறியீடு அதிகரித்து சாதனை படைத்துள்ளது. அதாவது, வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 384 உயர்ந்து, 84,929 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 148 அதிகரித்து 25,939 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. மேலும், இந்த உச்சத்தின் காரணமாக சில பங்குகள் லாபத்தை ஈட்டியுள்ளது.
அந்த வரிசையில் ACTION CONSTRUCTION EQUIPMENT பங்கானது அதிக அளவில் முதலீட்டாளர்களுக்கு லாபத்துடன் மல்டி பேக்கர் வருமானத்தை அளித்துள்ளது. மேலும், ரூ. 7-ல் கிடைக்க தொடங்கிய பங்கானது, தற்போது ரூ.1400 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தின் முடிவில், 3.48% உயர்ந்து, ரூ.1440 ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




