இன்றைய காலகட்டங்களில் பலரும் இஎம்ஐ உதவி மூலம் பொருட்கள் வாங்குவது மற்றும் தங்களின் தேவைக்கு இஎம்ஐ கணக்கு முறைகளை பயன்படுத்துகின்றனர், பலரும் ஒரு சில காலத்திற்கு மேல் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் சில நேரங்களில் மரணம் கூட நிகழ்கிறது..
வங்கி அல்லது வேறு நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் பட்சத்தில் இஎம்ஐ மூலமாக கடனை கட்டி வருகின்றனர், இஎம்ஐ கட்டவில்லை என்றால் பயப்பட வேண்டாம் வங்கி சார்பில் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், பிறகு உங்களை தொடர்பு கொண்டு உங்களோடு பேசும் பட்சத்தில் நீங்கள் இஎம்ஐ கட்ட முடியாத காரணத்தை தெளிவாக வங்கி மேலாளரிடம் கூறும் பொழுது அதற்கு ஏற்ற முறையில் வங்கி கணக்குகளை சரி பார்த்து இஎம்ஐ கட்டுவதற்காக உங்களுக்கு கால அவகாசம் தந்து உங்களின் சூழ்நிலை புரிந்து நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றனர் இதனால் இஎம்ஐ கட்டவில்லை என்று பயப்பட வேண்டாம்..!!