
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது T20 போட்டி நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 161 ரன்கள் குவித்தது. அதன் பிறகு மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விளையாடிய இந்திய வீரர்கள் 6.3 ஓவர் முடிவில் 81 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச போட்டிகளில் நடப்பாண்டு 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2024ல் 18 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் விளாசியுள்ளார். இப்பட்டியலில் குசல் மெண்டிஸ் (888*), இப்ராஹீம் சத்ரான் (844*) , ரோகித் சர்மா (833*) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.