இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 17 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 18 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பும்ரா இன்னும் முதுகு வழியில் இருந்து மீளவில்லை. அதன் காரணமாகவே அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் விலகினார். அதன்படி தற்போது வரை காயத்தில் இருந்து மீளாத அவர் முதல் 4 அல்லது 5 போட்டிகளில் விளையாட மாட்டார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியாகும் பட்சத்தில் மும்பை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.




