இந்தியாவில் பிரபலமான தொலைத்தொடர்பு திட்டமான ஜியோவில் இந்த சிறப்பு திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜியோ:
அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மக்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். தேவை அதிகரிக்க அதிகரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.அந்த வரிசையில் மக்கள் மனதில் எப்போதும் முதலிடத்தை ஜியோ நிறுவனம் பிடித்துள்ளது. ஜியோவில் பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. சில திட்டங்களில் டேட்டா மட்டுமல்லாமல் இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.
ஜியோவில் ரூ 3599/- ரூபாய்க்கு சூப்பர் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது 365 நாளுக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் 64 கேபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது. அதனுடன் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (Joi Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.