மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே அண்மை காலமாக மோதல் முற்றியது. கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மதிமுகவில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ தற்போது உத்தரவிட்டுள்ளார்.




