Nellikkai Tea | உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் டீ செய்வது எப்படி?..

நெல்லிக்காய் நமது உடலுக்கு சத்துக்களை தரக்கூடிய ஒரு காயாகும். இந்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும்.

இது எல்லா காலநிலையிலும் இலகுவாக கிடைக்கக்கூடியது. இதை சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேத இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

இந்த காயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. மேலும்  நெல்லிக்காய் மனதையும்  உடலையும் அமைதிப்படுத்தும்.

இவ்வாறு பல குணநலங்கள் கொண்ட நெல்லிக்காயை எல்லோரும் விரும்பி உண்பது குறைவு. அவர்களுக்காக நெல்லிக்காயில் சுவையான  டீ எப்படி போடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காய்  டீ:

நெல்லிக்காய் டீ சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு  பானம். இந்த காயில் டீ செய்து குடித்தால் அது உடலில் உள்ள பல பிரச்சனைகளை இல்லாமல் செய்யும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் இதில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து பருகலாம்.

வெல்லத்திற்கு பதிலாக நீங்கள் தேனும் சேர்த்துப்பருகலாம்.

இந்த டீ தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வராது. வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால் இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்து கொள்ளும்.

இதில் ஆன்டி ஆக்சைட்டுகள் அதிகம் காணப்படுவதால் சரும பளபளப்பை பாதுகாக்கும் மற்றும் முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Read Previous

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) – 144 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இந்த சண்டே இறால் மசாலா குழம்பு இப்படி செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular