Newspaper-இல் Printing Mistakes-களை எப்படி கண்டுபிடிப்பாங்க தெரியுமா?.. அதுக்கு ஒரு வழிமுறை இருக்கு..!!

தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு உலக நடப்புகளை மக்கள் தெரிந்து கொண்டது செய்தித்தாள்கள் மூலமாக தான். தினமும் காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இன்றும் பல பேருக்கு இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு பிறகு அனைவரும் போனில் தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸ்களும் முந்தைய தலைமுறையினரான தாத்தா பாட்டி போன்றவரும் செய்தித்தாள்களில் செய்திகளை படிப்பது தான் விரும்புகின்றனர். அது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக கூட இருக்கிறது.

தினமும் இலட்சக்கணக்கான செய்தித்தாள்கள் அச்சிடப்பட்டு வெளி வருகிறது. இது தினமும் நடக்கும் ஒரு அன்றாட நிகழ்வு. ஆனால் இத்தனை லட்சக்கணக்கான செய்திகள்களை அச்சிடும்போது அதில் தவறுகள் இருக்கிறதா Printing Mistake ஏற்படுகிறதா எப்படி என்பதை எப்படி கண்டுபிடிப்பார்கள் தெரியுமா? அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது.
நாம் தினமும் படிக்கும் செய்தித்தாள்களின் கீழே நான்கு வண்ணப் புள்ளிகள் வரிசையாக அச்சிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். ஊதா, பிங்க், மஞ்சள், கருப்பு என வரிசையாக 4 புள்ளிகள் இருக்கும். இந்த நான்கு வண்ணங்களை ஒன்றாக கலக்கும் போது தான் எந்த நிறத்தையும் நாம் பெற முடியும். செய்தித்தாளில் நாம் பார்க்கும் அனைத்து வண்ணங்களும் இந்த நான்கு வண்ணங்களின் கலவையாக தான் இருக்கும்.

அதேபோல் ஒவ்வொரு செய்தித்தாளும் அச்சிடப்பட்டு வந்த பின்னர் இந்த நான்கு புள்ளிகள் ஒரே மாதிரி இருந்தால் அந்த செய்தித்தாள் எந்த தவறும் இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த நான்கு வண்ணப் புள்ளிகள் சரியாக இல்லாமல் மங்கலாக இருந்தோ ஒன்றுக்கு மேல் ஒன்று அச்சடிக்கப்பட்டு இருந்தாலும் அந்த செய்தி தாளில் Printing Mistake இருக்கிறது என்பதை எடுத்துக்கொண்டு அதை மாற்றம் செய்வார்கள். இவ்வாறு தான் செய்திதாளில் பிரின்டிங் மிஸ்டேக்கை கண்டுபிடிக்கிறார்கள்.

Read Previous

வங்கி வேலை வாய்ப்பு..!! 600 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ரூ.62,000/- ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular