PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் ELI திட்டத்தின் சலுகைகளை பெற வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, “வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கான சலுகைகளைப் பெற, ஊழியர்களின் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கபட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் EPFO UAN செயல்படுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடு பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மார்ச் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”. மேலும், உங்கள் UAN-ஐ செயல்படுத்தபட்டதும், நீங்கள் PF கணக்கு மேலாண்மை, PF பாஸ்புக் பதிவிறக்கம், ஆன்லைன் கோரிக்கை மற்றும் PF பரிமாற்றம் போன்ற பல சேவைகளை இடையூறு இல்லாமல் அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

அப்பா, மகள் நம்பிக்கையை உணர்த்தும் அருமையான கதை படியுங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

அருமையான பாட்டி பேரன் கதை..!! கண்களில் கண்ணீர் வரவழைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular