விவசாயிகளுக்கு, இந்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.2,000-ஐ பெறுகிறார்கள். இந்நிலையில் 21வது தவணையை தீபாவளிக்கு முன்னரே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ளவர்கள் மட்டுமே தவணை சலுகைகளைப் பெறுவார்கள்.




