தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 வது சீசன் இன்று முதல் தொடங்கி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராய்ல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி வாரியர் திருச்சி, மதுரை பாந்தர்ஸ்,சேலம் ஸ்பார்ட்ன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் சென்னை, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாநகரங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒரு முறை மோதும். ஒவ்வொரு அணிகளும் 7 முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஒவ்வொரு போட்டிகளும் இரவு 7.15 மணிக்கும் டபுள் ஹெட்டர் போட்டிகள் இருக்கும் சமயத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படும்.