
அன்பென்றால்
என்னவென்று தெரியுமா..?
சொல்லி புரிவதல்ல அது.
செய்வதில் அறிவது.
அக்கறையை வெளிப்படுத்துவது
அன்பென்று யார் சொன்னது.
அக்கறையுள்ளவன் என்று
நம்புவதும்..
நம்ப வைப்பதுமே அன்பு.
அன்பை பெற
ஆசையிருந்தால் போதும்.
நம்பிக்கை மட்டுமே அன்பை தரும்.
அன்பு அடிமைப்படுத்தும்.
அடிமையாக இருக்கிறேன்
என்று பிதற்றாது.
அன்பு ஆசையை வளர்க்கும்.
ஆசைப்படுகிறேன் என்று உளராது.
அன்பு ஆசையோடு
இணைந்தால் அது காதல்.
அன்பு மரியாதையோடு
இணைந்தால் அது கனிவு.
அன்பு கோபத்தோடு
இணைந்தால் அது உரிமை.
அன்பு கண்ணியத்தோடு
இணைந்தால் அது கடமை.
அன்பு எதிர்பார்ப்போடு
இணைந்தால் அது உறவு.
அன்பு கடமையோடு
இணைந்தால் அது மனிதம்.
அன்பு அன்போடு
இணைந்தால் அது மகிழ்ச்சி.
அன்பு கர்வத்தோடு
இணைந்தால் அது ஏமாற்றம்.
அன்பிற்கு தனிமை பிடிக்காது.
அன்பு அடிமைப்படுத்தும்
அடிமைத்தனம் அன்பிற்கு பிடிக்காது.
ஆம்..அன்பே ஆளும்.
அன்பு வாழ்கிறதோ இல்லையோ
நீ வாழ அன்பு வேண்டும்.
அன்பை சம்பாதிக்க
ஆசையிருந்தால் போதாது.
நம்பிக்கையை
இறுக பற்றியிருக்கவேண்டும்
புன்னகையின் பாதையில்
கருணையோடு பயணிக்க வேண்டும்.
அன்பிற்கு அடையாளம்
தேவையில்லை.
அது அருட்குடையின் நிழல்.
அன்பிற்கு அறிமுகம் தேவையில்லை
அன்பு உன்னை
அறிமுகப்படுத்தினால்
நீ பாக்கியசாலி.