நம்மை நேசிக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தால், (மனைவி , காதலி)அவள் நம்மை விட்டு பிரியாத அளவுக்கு நம்மை நேசிப்பதால் அவள் எப்போதும் நம்மிடமிருந்து வெளியேற மாட்டாள் என்று கருதுகிறோம்.
இதன் விளைவாக, நாம் அவளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறோம், சில சமயங்களில் அவள் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவளிடம் கடுமையாகப் பேசுகிறோம். அவள் வைத்த அன்பின் காரணமாக அவள் அமைதியாகிறாள். தை ஒரு ஆண் தனக்கு சாதகமாக நினைக்கிறான்.
ஆரம்பத்தில் அவளிடமிருந்து அழைப்பு வருவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கிறோம், எல்லாவற்றையும் அவள் தொடங்குவதற்காக எப்போதும் காத்திருக்கிறோம், குறுஞ்செய்தி அனுப்புவது முதல் அன்று என்ன ஆடைகளை நீங்கள் அணிய வேண்டும் என்பது வரை அவள் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறோம்.
பின்னாளில், அவள் நமக்கான பின்னர் அவளுக்காக குறைந்த அளவு நேரத்தை கூட ஒதுக்க மாட்டோம், சில சமயங்களில் அவளை புண்படுத்தும் விஷயங்களை கூட சாதாரணமாக பேசிவிடுகிறோம்.
அவளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு சிறுமைப்படுத்துகிறோம்.
அவளுடைய கடந்த காலத்தை நினைவூட்டி அவளை சிறுமைப்படுத்துகிறோம்.
அவள் தன்னை மேம்படுத்தி கொள்வதற்கான எந்த வசதியையும் அவளுக்கு கொடுப்பதில்லை.
அவளுக்கான மதிப்பை கொடுப்பதில்லை; நாம் அவள் சொல்வதைக் கேட்பதும் இல்லை.
அவள் நம்மை விரும்புகிறாள், நம்மை விட்டு விலக மாட்டாள் என்று தெரிந்ததால் சில சமயங்களில் தேவையில்லாத செயல்களை கூட செய்கிறோம்.
கடைசியாக அவள் உங்களை விட்டு விலகுகிறேன் என்று சொல்லும்போது கூட, அவள் எங்கே போக போகிறாள்? திரும்பி வருவாள் என்று நம்மை நாமே நினைத்து பெருமைப்படுகிறோம்.
நமது தவறுகளை உணரும் முன், அதையே திரும்ப திரும்ப செய்யும்போது அவள் திரும்பி வரக்கூடாது என்று ஒரு முடிவை எடுத்திருப்பாள்; அப்போதுதான் நாம் தவறவிட்டது ஒரு விலைமதிப்பற்ற பெண் என்பதை நாம் உணர்கிறோம்.
அவள் அவளுக்கான சிறந்த ஒருவரைக் கண்டுபிடித்து, அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அவள் ஒரு நல்ல பெண் இல்லை என்று அவளை தூற்ற துவங்குகிறோம். அவள் நம்மைக் கைவிட்டுவிட்டாள் என்பதாலேயே அவளை ஒழுக்கமற்றவளாக கட்டமைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டு மூலையில் உட்காரும் கட்டத்தை கடந்துவிட்டாள்.
நாம் குப்பை போல் நடத்தும் பெண் விரைவில் அல்லது தனது மதிப்பை அறிந்த ஒரு ஆணின் மனம் கவர்ந்த ராணியாக மாறுவார். அது தான் வாழ்க்கை.
பெண்களை போற்றாத எந்த ஆண்மகனும் வாழ்க்கையில் உயரங்களை தொட்டதில்லை.
புரிந்தால் வாழ்க்கை சிறப்பாகும்….