
ஆண்களை விட பெண்கள் அதிக காலம் உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா..??
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஏன் ஆண்களை விட பெண்கள் மட்டும் அதிக வருடம் உயிர் வாழ்கிறார்கள் அதற்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே ஆண்கள் புகைபிடித்தல் மது அருந்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உடலில் நோய்வாய் பட்டு அவதிப்படுகிறார்கள். இருந்தாலும் ஆண்களை விட பெண்களின் உடலில் சுரக்கும் டெஸ் டோஸ்டிரோன் எனும் பாலின ஹார்மோன் செயல்பாடு தான் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெண்களுக்கு சுரக்கும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் உடலில் இருக்கும் அணுக்கள் இறப்பதை குறைக்கிறது. இதனால் பெண்கள் அதிக காலம் உயிர் வாழ முடிகிறது என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களை விட பெண்களின் டி என் ஏவில் நுனியில் இருக்கும்telomere நீளமாக இருப்பது தான் ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணமாகும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.