
Oplus_131072
இப்படி ஒரு வண்டி தெருக்களில்
சீமெண்ணெய் (மண்ணெண்ணெய்) விற்று கொண்டு வரும் 🙄
கேஸ் அடுப்பு என்றால் என்ன என்றே தெரியாத காலக்கட்டம் அது…
திரி ஸ்டவ் , பம்ப் ஸ்டவ் மற்றும் விறகு அடுப்பிலும் இதை சிறிது ஊற்றி தான் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.
இப்படி சமையல் உபயோகத்திற்கு எல்லாமே அந்த எண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும் என்பதால் இதற்கு
பயங்கர டிமாண்ட்.
அதுபோக பல வீடுகளில் மின்சார வசதியே இல்லாமல் திரி விளக்கு தான் பயன்படுத்தினோம்.. மற்றும் பெட்ரோமாக்ஸ் அதற்கும் இந்த சீமெண்ணெய் தான் உபயோகப் படுத்துவோம்.🙄
அவ்வளவு எளிதில் கிடைக்கவும் செய்யாது 🙄
ரேசன் கடைகளில் பல மணி நேரம் காத்து இருந்து வாங்க வேண்டும்…
தெருக்களில் வரும் வண்டிகளிலும் வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும்… அதுவும் சீக்கிரம் தீர்ந்து விடும்.
இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் என்று சொன்னால் கூட இப்போது உள்ள தலைமுறை நம்பவே மாட்டார்கள் 🙄