இறந்தவர் விந்தணுக்கள் மூலம் வாரிசு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் விந்தணுக்கள், அவர் சம்மதத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் உயிரிழந்துவிட்டதால், அவருடைய பாதுகாக்கப்பட்ட விந்தணுக்கள் மூலம் வாரிசை உருவாக்கித் தருமாறு உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், “விந்தணு மற்றும் கருமுட்டை அளிப்பவர்கள் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும், மரணத்துக்கு பிந்தைய இனப்பெருக்கம் தவறில்லை” என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.