Oplus_131072
இறைவனை வணங்கும் முறையின் அர்த்தங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
நாம் அனைவரும் கடவுளை அதாவது இறைவனை வணங்கும் பொழுது இரு கைகளையும் குவித்து தலை குனிந்து கண்களை மூடி வணங்குவோம். இப்படித்தான் நம்மில் பெரும்பாலும் கடவுளை வணங்குவோம். இந்நிலையில் இறைவனை வணங்கும் முறையில் அர்த்தங்கள் என்னென்ன என்பதை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைக்கு மேல் தூக்கி வணங்குவது என்பது உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை நீ ஒருவனே எனக்கு துணை என்று இறைவனை சரண் அடைவதன் வெளிப்பாடு. முகத்திற்கு அருகில் கைகளை குவித்து தலை குனிந்து வணங்குவது என்பது அடக்கத்தின் வழிபாடு உனக்கு கீழ்தான் உலகமே இயங்குகிறது என்ற பொருளில் சாதாரணமாக எல்லோரும் வணங்குகின்ற முறை. நெஞ்சிருக்கும் நேராக கைகளை குவித்து வணங்குவது என்பது இறைவா உன்னை என் நெஞ்சுக்குள்ளேயே வைத்திருக்கிறேன் எப்பொழுதும் என்னுடைய இருந்து என்னை காப்பாற்று என்ற எண்ணத்தினை குறிக்கும்.




