
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் என்பவர் மனைவி பிரின்சி (33). இவர் தனது கணவர் , 2 பிள்ளைகளை விட்டு , அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (25) என்ற கார் டிரைவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு ஓடி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி பிரின்சி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு பிரின்சிபின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரின்சியின் தந்தை பால்ராஜ் நேற்று (செப்.,27) மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், – டிரைவர் அபினேஷ் தனது மகளை ஏமாற்றி அவருடைய நகை பணத்திற்காக ஆசைப்பட்டு அழைத்து சென்று விட்டதாகவும், அங்கு அவரது வீட்டில் நண்பர்களை அழைத்து வந்து நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க அவரை வற்புறுத்தியதாகவும், இதனால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் எனவும் பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு காரணமான அபினேஷ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.