Red and white blood cells move inside the artery. Red blood cells carry nutrients for the whole body, for example, oxygen. Medical science illustration. 3d rendering
நமது உடலின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான விஷயமாகும். இப்போது நிறைய பேரிடம் இருக்கும் பிரச்சினை தான் உடலில் இருக்கும் ரத்த அளவு கம்மியாக இருப்பது. அதனை சரி செய்ய நமது உடலில் இருக்கும் ரத்த அளவை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
நமது ரத்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தினமும் நிச்சயமாக நாம் உட்கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் உடற்பயிற்சியில் எப்போதும் ஈடுபட வேண்டும். இவை இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நமது உடலில் ரத்த அளவு மிக சுலபமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரத்த அளவு அதிகரிக்க பீட்ரூட் மிகவும் உதவும். பீட்ரூட்டை தினமும் காலையில் ஜூஸ் போட்டு குடித்தால் நமது உடலில் ரத்த அளவே நிச்சயமாக அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் மாதுளை பழத்தையும் அதிகமாக சாப்பிட வேண்டும். சுவரொட்டி மற்றும் ஆட்டு ஈரல்களில் நமது உடலுக்கு ரத்தத்தை அதிகரிக்க தேவையான சத்து இருக்கிறது.
இதன் காரணமாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை உட்கொள்வது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் 12 ஆசனங்களை கொண்ட சூரிய நமஸ்காரத்தை தினமும் காலையில் செய்து வர வேண்டும். இவையெல்லாம் செய்தாலே நமது உடலில் இருக்கும் ரத்த அளவு நிச்சயமாக கூடும்.




