பெற்றோர்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதோடு மட்டுமில்லாமல் வளர்ப்பு முறைகளில் நான் அவர்களின் எதிர்காலம் அமைந்துள்ளது..
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது எளிதானது அல்ல வளர்ப்பு முறையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும், இன்றைய காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றால் தான் பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க முடியும் அதனால் அவர்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை போதிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை இதனால் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு எதை கற்றுக் கொடுக்கிறோமோ அதை அவர்கள் விரைவாக கற்றுக் கொள்கிறார்கள், எனவே குழந்தைக்கு 13 வயதாகும் முன் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொடுப்பது நல்லது நல்லவர்களாக குழந்தைகள் வளர்ப்பது மட்டுமல்லாமல் வல்லவர்களாகவும் வளர்த்தால் மட்டுமே மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு அவர்களால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும், வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் நண்பர்கள் பணியாளர்கள் முதியோர்கள் தினசரி சந்திப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இடங்களிலும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக கற்றுக்கொடுங்கள் என்ற சமூகத்தில் உறவினர்களிடத்தில் குழந்தைகள் ஒட்டாமல் இருக்க பெற்றோர்களை காரணம் எந்த சூழலிலாவது சுற்றியுள்ளர்களின் உதவி ஒருநாள் தேவைப்படும் அன்று அவர்கள் நாம் காட்டிய அன்பையும் மரியாதையும் வைத்து உதவ முன்வருவார்கள், அதேபோல் குழந்தைகளுக்கு சுத்தத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும் மேலும் நேர மேலாண்மை குறித்த நேரத்தில் படித்து முடிக்கவும் குறித்த நேரத்தில் சாப்பிடவும் தூங்கவும் கற்றுத் தர வேண்டும் மேலும் நிதி மேலாண்மை குழந்தைகளுக்கு 13 வயது ஆகும் முன்னே பணத்தை சேமிப்பது பற்றி சொல்லித் தர வேண்டும் அதேபோல் பொறுப்புகள் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று இதைத் தாண்டி ஒன்று உள்ளது குழந்தைகள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்து வைத்திருக்க வேண்டும்..!!