எத்தனை தலைமுறையை காக்கும் புண்ணிய பலன்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம் இந்தப் புண்ணியம் போதுண்டா நம்ம ரெண்டு தலைமுறைக்கும் காக்கும். என்றும் ,உங்க அப்பா செய்த புண்ணியங்க அதான் உங்களை இவ்வளவு நல்லா வச்சிருக்கார் அந்த கடவுள். என்று தினசரி வாழ்க்கையில் இவற்றையெல்லாம் அடுத்தவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் எத்தனை தலைமுறையை காக்கும் புண்ணிய பலன் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது மூன்று தலைமுறைகளை காக்கும்.
பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது ஐந்து தலைமுறையை காக்கும்.
கோவில் திருப்பணிக்கு உதவுவது ஏழு தலைமுறையை காக்கும்.
அனாதை பிணத்திற்கு அந்திமகிரியை 11 தலைமுறை காக்கும்.
கோசலைக்கு உதவுவது மற்றும் பசு பராமரிப்பு 13 தலைமுறைக்கும் காக்கும்.
காசி மற்றும் கையாவில் செய்யப்படும் தர்ப்பணம் 16 தலைமுறைக்கும் காக்கும்.
பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் இது 27 தலைமுறையை காக்கும்.




