
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து அசைவத்தை குறிப்பிட்ட நாட்களில் உண்ணலாம் குறிப்பிட்ட நாட்களில் எல்லாம் உண்ணக்கூடாது என்று வீட்டில் உள்ள பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்திலோ அனைவரும் தனக்கு பிடித்த வகையில் அசைவத்தை எந்த நாளில் எந்த நேரத்தில் வேணாலும் உண்ணும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் அசைவத்தை எந்த நாட்களில் எல்லாம் உண்ணக்கூடாது, அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குறிப்பாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த நாட்களில் எல்லாம் நம்முடைய உடலில் செரிமான செயல்பாடு என்பது குறைவாக இருக்கும். இதனால் அசைவம் சாப்பிடுவதை நாம் தவிர்த்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். குறிப்பாக பூஜை நாட்களிலும் நல்ல நாட்களிலும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் கோவிலுக்கு போவதற்கு முன்பு அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அப்படி சாப்பிட்டு விட்டால் குறைந்த பட்சம் 4 மணி நேரம் கழித்து கோவிலுக்கு செல்லலாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்.உடல் உழைப்பு அதிகமாக உள்ளவர்கள் தினமும் கூட அசைவம் சாப்பிடலாம். ஏனென்றால் அவர்கள் ஆடி ஓடி வேலை செய்வதால் அசைவம் சாப்பிட்டாலும் எந்த ஒரு செரிமான பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அசைவம் சாப்பிட்டு விட்டு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று பிரச்சினைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உண்டு.