
ஐப்பசி மாத பிரதோஷம் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர், அதன்படி ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு நாளை நவம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பக்தர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது, மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர், மேலும் வயதானவர்கள் கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கமும் மழையின் தாக்கமும் அதிகரிக்கும் நேரத்தில் முதியவர்கள் மற்றும் சிறியவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும் முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது மதுரை மாவட்ட காவல்துறை..!!