
ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..??
டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானோர் இந்த காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அதிகமாக டீ குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். டீ குடிப்பதை நிறுத்தினால் இந்த பிரச்சனை நீங்கும். அதுமட்டுமின்றி அதிகமாக டீ குடிப்பதை நிறுத்தினால் முகத்தில் பருக்கள் ஏற்படுவது குறையும். ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் பல் சொத்தை பிரச்சனையிலிருந்து விடுபடலாம். ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். டீ குடிப்பதை நிறுத்தினால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் எதுவும் வராது. அப்படி தூக்கமின்மை பிரச்சனை இருந்தாலும் டீ குடிப்பதை நிறுத்துவதன் மூலம் அதனை சரி செய்ய முடியும்.