
கண்பார்வை இல்லாத ஒரு வாடிக்கையாளர் ஒரு உணவகத்திற்கு சாப்பிட வந்தார்!
அவரை வரவேற்ற அந்த ஓட்டல் உரிமையாளர் அவரை வரவேற்று அமர வைத்து ! மெனு கார்டை அவரிடம் கொடுக்க!
அவர் சிரித்து கொண்டே! என்ன சார் எனக்கு கண் தெரியாது மெனு கார்டை எப்படி படிப்பேன் ! நீங்க என்ன பண்ணுங்க கடைசியாக சாபிட்டவன் பிளேட்டை எடுத்துவாங்க ! நான் முகர்ந்து பார்த்து அது என்ன உணவு என்று நான் சாப்பிட ஆர்டர் செய்கிறேன்! என்றார்.
இதை நம்ப முடியாத ஓனர் அவர்
சொன்ன மாதிரி கடைசியாக சாப்பிட்டவன் பிளேட்டை கொண்டுவந்து கொடுக்க!
முகர்ந்து பார்த்திட்டு ! மட்டன் பிரியாணியும் சிக்கன் சுக்காவும் சாப்பிட்டு இருக்கான். எனக்கும் அதையே கொடுங்க என்றார்.
அந்த உணவகத்திற்கு அவரின் மனைவி குமுதா தான் செஃப் அவரிடம் போய் கேட்க ஆமாம் பார்வையற்றவர் சரியாக தான் சொல்லி இருக்கார் என்று அவங்க சொன்னாங்க! அவருக்கு அந்த உணவு பரிமாறப்பட்டது.
அடுத்த தடவையும் அதே மாதிரி வந்து சாப்பிட்ட பிளேட்டை முகர்ந்து பார்த்து விட்டு அதே உணவு கேட்க அவர் மனைவி குமுதா செஃப் அந்த உணவை கொடுக்க!
மிகவும் கடுப்பாகி போனார் நம்ம முதலாளி! அடுத்த முறை வரட்டும் நான் பார்த்து கொள்கிறேன் என்றார்!
நான்கு நாள் கழிந்து அதே நபர் வந்தார். இவர் உள்ளே போய் அவர் மனைவி சாப்பிட்டு வைத்து இருந்த தட்டை எடுத்து வந்து அவரிடம் கொடுக்க!
அவர் முகம் மிகவும் சந்தோசம் அடைந்தது. என் கேர்ள் ப்ரெண்ட் குமுதா இங்க சாப்பிட வந்தாங்களா அவங்களுக்கு காடை ரோஸ்ட்டும் குஷ்காவும் விரும்பி சாப்பிடுவாங்க! அதே சாப்பாடு தான் இது! என்று சொல்ல !
இப்ப ஓனருக்கு மயக்கம் வர ஆரம்பித்து இருந்தது.